நான் போகிறேன் என்னை தேட வேண்டாம்! நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி!

0
117

இந்தியாவில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு காரணமாக , தமிழகத்தில் பல மாணவ, மாணவிகளின் உயிரைக் குடித்துக் கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசிற்கு மாநில அரசு சார்பாக பல கோரிக்கைகளை வைத்து இருந்தாலும் அதனை மத்திய அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த நீட் நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 14 மாணவ, மாணவிகள் உயிர் இழந்து இருக்கிறார்கள். இதனால் இந்த நீட் தேர்விற்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும், தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி எத்தனை கண்டனங்கள் தெரிவித்தாலும் கூட அதனை மத்திய அரசு பெரிதாகக் கருதவில்லை. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்களின் உயிரிழப்பு நேர்கிறது என்பதை நினைத்தால் மனம் கலங்கத்தான் செய்கிறது.

இந்த சூழ்நிலையில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் இருக்கின்ற நாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மதன் இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருக்கிறார் விக்னேஷ் 12-ம் வகுப்பை முடித்துவிட்டு நீட் தேர்வுவுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். கடந்த வருடம் நீட் தேர்வு எழுதினார் ஆனால் அது தோல்வி அடைந்து விட்டார் இதனைத் தொடர்ந்து இந்த வருடம் இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதினார். ஆனால் அந்த தேர்வில் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லாத காரணத்தால், மாணவன் விக்னேஷ் கடந்த சில தினங்களாக அமைதியாக இருந்து வந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், மாணவன் விக்னேஷ் நேற்று பிற்பகல் வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க இயலவில்லை இதைத் தொடர்ந்து அவருடைய தாய் தந்தையர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவன் விக்னேஷ் அவருடைய வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது அம்மா, அப்பா நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க இயலவில்லை. இந்த முறையும் நீட் தேர்வில் ஏமாற்றம்தான் உண்மையை கூற எனக்கு பயமாக இருக்கிறது. இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பதற்கும் உங்களை உறவுமுறை சொல்லி அழைப்பதற்கு எனக்கு தகுதி கிடையாது. இதன் காரணமாக, வீட்டை விட்டு வெளியேறுகின்றேன் என்னை தேட வேண்டாம் இப்படிக்கு உங்கள் அன்பு மகன் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த கடிதத்தை வைத்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை பல மாணவ, மாணவிகள் இந்த நீட் தேர்வின் பயம் காரணமாக, உயிரிழந்திருக்கிறார்கள். இருந்தாலும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

Previous articleமகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்!
Next article21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை!