ஒரே ஒரு வார்த்தை சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! தீப் பொறியாய் அலறவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

சென்ற சில வார காலமாக தமிழகத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது இதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்தந்த துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.ஆளும் கட்சி செய்யும் தவறுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுவதும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறை ஆளும் கட்சிகள் சுட்டிக் காட்டுவதும், எப்போதும் நடைபெறுவது தான் என்றாலும்கூட இந்தக் கூட்டத்தொடர் சற்றே வித்யாசமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதில் பல கட்சிகள் அந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.

இதில் முக்கிய சட்டமாக பார்க்கப்படுவது நீட் தேர்வுக்கு எதிரான சட்டம் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.தமிழகத்தை பொறுத்த வரையில் திமுக தற்போது ஆளும் கட்சியாக இருந்தாலும் கூட திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலேயே இந்த நீட் தேர்வுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய எதிர்ப்பைக் கிளப்பி அதற்காக போராட்டங்களையும் முன்னெடுத்து நடத்தியது என்பதில் சந்தேகம் இல்லை.இந்த நிலையில், சட்டசபையின் இறுதி நாளான இன்றைய தினம் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா குறித்த விவாதம் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தீர்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் நேற்றைய தினம் ஒரு மாணவர் பலியாகி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அவருடைய இந்த உரைக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வை தடுத்து நிறுத்தி பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் தலைவர் கலைஞர் கருணாநிதி தான் என்று தெரிவித்ததோடு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட நீட் தேர்வை நடத்துவதற்கான அனுமதியை தமிழகத்தில் கொடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முறையாக நடத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இதே சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதா நிராகரிக்கப்பட்டது தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில்தான் என கூறியிருக்கிறார்.

நீட் தேர்வின் பயம் காரணமாக அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனிதா உட்பட பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதும் உங்கள் ஆட்சியில்தான் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அறைக்கு சொல்லாமல் மறைத்தது அதிமுகவின் ஆட்சி காலத்தில்தான். அதாவது எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில்தான் இப்போது உயிரிழந்த மாணவர் தனுஷ் இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி மீது முன்வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மத்திய அரசுடன் நீங்கள் கூட்டணியில் தான் இருந்தீர்கள் இப்போதும்கூட கூட்டணியில் தான் இருக்கிறீர்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு நிலை வருகை தந்த போது பாஜக தெரிவித்த சமயத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு தர வேண்டும் என்று அதிமுக நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்த தைரியம் அதிமுகவிற்கு கிடையாது இதைச் செய்திருந்தால் நீட் தேர்விற்கு ஓரளவிற்கு விலக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் ஆனால் நீட்தேர்வு காரணமாக மாணவச் செல்வங்கள் உயிரிழந்த போது மரண அமைதி காத்து ஆட்சி நடத்திய கட்சிதான் அதிமுக என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இருந்தாலும் திமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற் கொண்டு இருக்கின்றோம். அதற்கான சட்ட மசோதாவை இன்று நான் அறிமுகப்படுத்த இருக்கின்றேன் எனவே நீட் தேர்வை ரத்து செய்து பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ கல்வியில் மாணவர்களை சேர்க்க தற்போதைய அரசு எல்லாவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த குற்றச்சாட்டிற்கு பதிலாக முன்வைத்து அமர்கிறேன் என கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.