நீட் தேர்வை ஒழிப்போம் என்று வாய்ச்சபடால் விட்டது தவறு என்பதை முதலமைச்சர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது சென்னை திருமுல்லைவாயிலைச் சார்ந்த லக்ஷனா ஸ்வேதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார் தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வு எழுதினார்.
தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வை ஒழிப்பதற்கு சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது .அதே சமயம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையின் திறமையும் வளர்க்கும் விதத்தில் தமிழ்நாடு முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டனர் என தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக அரசு ஏற்படுத்திய பயிற்சி மையங்களை முறையாக செயல்படுத்தாததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. அதேபோல தற்கொலை சம்பவங்களும், அதிகரித்திருப்பது வேதனையை தருகிறது. நமக்கு கிடைத்திருக்கின்ற அற்புதமான, உன்னதமான, உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் இனிவரும் காலங்களில் யாரும் ஈடுபடக்கூடாது.
இனிமேலும் நீட் தேர்வை திமுக ஒழிக்கும் என்று பொதுமக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று வாய்சவடால் விட்டது தவறுதான் என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
மாணவர்கள் தங்களுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டதற்கும், அவர்களை இழந்து பரிதவித்து வரும் பெற்றோரின் துயரத்திற்கும், முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வு பயிற்சியுடன் மனவள பயிற்சியும், சேர்த்து வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.