நீட் தேர்வு எப்படி இருந்தது? ஒரு அலசல்!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற எல்லோரும் அடுத்ததாக தேர்ந்தெடுப்பது மருத்துவத்துறைதான் ஏனென்றால் மருத்துவத்துறையில் தான் சேவையுடன் கூடிய வருமானமும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்தத் துறையை பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் இந்தத் துறையில் கால் பதிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பட்டியல் இனத்தவர்கள் என்ற காரணத்தால், குறைவாக மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு மிக சுலபமாக இந்த மருத்துவ படிப்பிற்கான கனவு நனவாகிறது. ஆனாலும் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பெரும்பாலும் இந்த மருத்துவ துறையில் கால் பதிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு காரணம் இட ஒதிக்கீடு இந்த இட ஒதுக்கீட்டை வைத்துதான் பட்டியல் இனத்தவர்கள் மிகச் சுலபமாக இந்த மருத்துவ துறைக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் நன்கு படித்த அதாவது மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் இந்த மருத்துவத் துறையில் கால்பதிக்க சந்தர்ப்பமே கிடைக்காமல் போய்விடுகிறது.

இதனை களைவதற்காக மத்திய அரசு ஒரு முடிவை எடுத்தது அந்த முடிவுதான் நீட் தேர்வு. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் மருத்துவத் துறையில் சேர்ந்து படிக்க இயலும் என்ற ஒரு சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது ஆனால் இந்த மருத்துவ துறையில் படிப்பதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும் அந்த நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் சிபிஎஸ்சி துறையில் கேட்கப்படும் கேள்விகளாக இருப்பதால் தமிழகத்திலிருந்து பெரும்பாலானோர் இதில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதனால் பலர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையில் நீட் தேர்வில் இயற்பியல் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்றைய தினம் நாடு முழுவதும் நடந்தது. 3 ஆயிரத்து 862 மையங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்து 716 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து தொள்ளாயிரத்து 71 பேர் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில், நீட் தேர்வு கேள்விகள் எப்படி இருந்தது? தேர்வு மையங்களில் கெடுபிடிகள் எவ்வாறு இருந்தது? என்பது தொடர்பாக மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சென்னையில் இருக்கின்ற ஆசான் மெமோரியல் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் நிருபர்களிடம் தெரிவிக்கும்போது கேள்வித்தாள் மிக எளிமையாக தான் இருந்தது இருந்தாலும் இயற்பியல் பாடம் சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார்கள். வேதியியல் பாட கேள்விகள் மிகவும் கடினமாக இல்லை எளிமையாகவும், இல்லை. பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன. இருந்தாலும் சென்ற ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பதற்றம் இல்லாமல் இருந்தது என தெரிவித்து உள்ளார்கள்.

ஒரு மாணவி தெரிவிக்கும்போது இயற்பியல் மற்றும் வேதியியல் பாட கேள்விகள் சற்று எதிர்பாராத விதமாக இருந்தது. கணக்குகளைப் போட்டு பார்ப்பதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்னால் சோதனை செய்தார்கள். இருந்தாலும் இதுபோன்ற சோதனைகள் செய்வார்கள் என்று மனதளவில் தயாராக தான் போயிருந்தேன். இதனால் இது எனக்கு பெரிதாக தெரியவில்லை என கூறியிருக்கிறார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு மாணவி தெரிவிக்கும்போது, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதினேன் சென்ற வருடம் தேர்வு மிகவும் கடினமாக காணப்பட்டது. ஆனால் இந்த முறை நிச்சயமாக வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வீட்டில் இருந்து ஆறு மாத காலம் படித்தேன் ஒரு மாத காலம் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன் கஷ்டப்பட்டதற்கு பலனாக தேர்வு மிகவும் எளிமையானதாக இருந்தது. தேர்வு மையங்களில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக இருந்தன என்று கூறினார்.

அதேபோல ஒரு சில மாணவர்கள் இந்த வருடம் நேரடியாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இணையத்தில் பயிற்சி மேற்கொண்டதன் காரணமாக, தேர்வு சற்று கடினமாக இருந்தது எனவும் இயற்பியல் பாடத்தில் 45 வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்கள்.

நேற்றைய தினம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய சூழ்நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நீட் தேர்வில் இருந்து நிரந்தரமான விலக்கு பெறுவதற்கான வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள்.