வெளியானது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!!
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர எழுதும் நுழைவுத் தேர்வு ஆகும்.
இதன்படி ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். குறிப்பிட்ட இட ஒதுக்கீடு பெற்றவர்கள் 30 வயது வரையிலும் மற்றவர்கள் 25 வயது வரையிலும் எழுதலாம். இந்த தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.
வரும் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த நீட் தேர்வானது, ஆங்கிலம், ஹிந்தி, மற்றும் தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப் படுகிறது. நாடு முழுவதும் மே 7 ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடியும். நாடு முழுவதும் 499 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.