அரசு குழந்தைகள் காப்பகங்களில் அதிகாரிகளின் அலட்சியம்!! 7 நாட்களுக்குப் பிறகு மாயமான சிறுமிளை தனிப்பட்ட மீட்பு!!

Photo of author

By Savitha

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த மாயமான
பெண் குழந்தைகள் 7 நாட்களுக்கு பிறகு தனிப்படை மீட்பு.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் காப்பகத்திலிருந்த இரண்டு பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் அத்கிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏழு நாட்களுக்கு பிறகு
நாகப்பட்டினம் அருகே மீட்கப்பட்டனர்.

சிவகங்கை 48 காலனி பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது குழந்தைகள் காப்பகம். இங்கு வழக்கில் சிக்கிய குழந்தைகள், வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகள் என 42 குழந்தைகள் இங்கு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இரு வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரும், திருவேகம்புத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் இங்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2ந்தேதி அந்த இரு குழந்தைகளும் காப்பகத்திலிருந்து
கழிவறை ஐன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பினர்.

இதனை தொடர்ந்து இரு குழந்தைகள் காணாமல்போனதாக காப்பகத்தின் பொருப்பாளர் ஜெயா சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நகர் காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார், உத்தரவின்பேரில் எஸ்.ஜ,ஹரி கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு,சித்ரா, முத்துகிருஷ்ணன் காவலர்கள் , கடந்த 6 நாட்களாக காரைக்குடி, மதுரை, ஈரோடு, உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் நாகபட்டினம் அருகே கீழ்வேலூர் என்ற கிராமத்தில் சிறுமியின் நண்பர் உள்ள வீட்டில் இருப்பதாக தகவலின் பேரில்
காணாமல் போன சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

சிறுமிகள் மாயமாகி மீட்கபடுவது மூன்றாவது முறை என கூறப்படுகிறது.
இக் காப்பகத்தில் பணிபுரியும் இரவு காவலர் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் என்பதால் இரவு நேர பணிக்கு முறையாக வருவதில்லை என்றும்.

இங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களும் முறையாக இயங்குவதில்லை என்றும் இவற்றை கண்காணிக்கும் அதிகாரிகள் அலட்சிய போக்கில் செயல்பட்டு வருவதாகவும்.

இந்த காப்பகம் முறையான பாதுகாப்பு இன்றியே செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இந்த காப்பகத்தில் இருக்கிற பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.