வடகிழக்கு பருவமழையின் காரணமாக அதிகமாக பாதிக்கப்படும் என்ற காரணத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை வருவதற்கு முன்னரே நீர் வழித் தடங்களை தூர் வாருவதற்கு 11 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது என சொல்லப்படுகிறது. லாபம் அதிகம் கிடைக்கும் என்ற காரணத்தால், பணியை பெறுவதற்கு ஒப்பந்தக்காரர்கள் இடையில் கடுமையான போர் நடந்ததாக சொல்லப்படுகின்றது ஆட்சி மாறினாலும் அதிமுக ஆதரவு ஒப்பந்தக்காரர்கள் பலருக்கும் வழங்கப்பட்டன. இதில் 40% வரையில் கையூட்டு கைமாறும் என்று சொல்கிறார்கள்.
அதிலும் ஒரு முக்கிய நபருக்கு சென்ற ஆட்சிக் காலத்தில் 15 சதவீதமாக இருந்த கையூட்டு தற்சமயம் 19% முறையில் போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது. மழை கொட்டி தீர்த்தது வேலையும் அதிகமாக வந்துவிட்டது. கமிஷனை குறைத்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் மூலமாக பேச்சுக்கள் நடைபெற்றாலும் முக்கிய புள்ளி கறாராக இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. பில் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று மிரட்டி இருக்கிறார் அவர். அதோடு இந்த ஒப்பந்தங்களை எடுத்தவர்கள் வாயடைத்துப் போய் விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.