சிவகார்த்திகேயன் உடன் பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? இயக்குனர் எடுத்த முடிவு?

0
74

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் படத்தில், பிரபல இந்தி நடிகை கஜோலின் மகள் நடிப்பதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான “ டாக்டர்” படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கி வருகிறார். இந்த படத்தை  பிரியங்கா மோகன் கதாநாயகி நடிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையிலும் கோவாவிலும் நடைபெற்ற நிலையில்  பொதுமுடக்கம் காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது, ஆக்‌ஷன் காமெடி கதையை கொண்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட, ‘செல்லம்மா’ என்ற பாடல் டிரெண்டானது. யூடியூபில் இந்த பாடலை நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை கஜோல் தம்பதியின் மகள் நைசா தேவ்கன் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஹீரோயினாக இல்லாமல், முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்தப் படத்தில் அவர் நடிப்பதற்கு கஜோலும் அஜய் தேவ்கனும் சம்மதித்துவிட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. 

இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் இந்த தகவல் பற்றி கேட்டபோது மறுத்தார். ‘டாக்டர் படத்தில் அவர் நடிக்கவில்லை. தவறான தகவல் என்றார். மேலும் அவர் கூறும்போது, படத்தின் ஷூட்டிங்  படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இன்னும் கால்வாசி படம் மட்டுமே  எடுக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியுள்ளார் .

 

author avatar
Parthipan K