நேபாளில்-இந்திய நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர்!!

Photo of author

By Parthipan K

நேபாளில்-இந்திய நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர்!!

Parthipan K

கடந்த மே மாதம் 8ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்ச்சலாவுடன்-லிபுபேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ சாலையை திறந்து வைத்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதனையடுத்து இந்தியா – நேபாளம் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது.

இதனால் நேபாளம், இந்திய எல்லை பகுதியான, லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராஆகியவற்றின்  வரைபடத்தை வெளியிட்டது.இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,  சம்பந்தமே இல்லாமல் நேபாள பிரதமர் சர்மா ஒலி, தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா தூதரகம் மூலம் சதி செய்கிறது என்று குற்றாம்சாட்டினார்.

இதனிடையே நேபாள நாட்டின் கேபிள் டி.வி. ஆபரரேட்டர்கள் நேபாளத்தின் உணர்வை புண்படுத்தும் அறிக்கைகளை ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டியதோடு மத்திய அரசின் சேனலான தூர்தர்ஷனை தவிர்த்து மற்ற அனைத்து இந்திய  செய்தி சேனல்களை ஒளிரப்புவதை தடைசெய்தது.

இதனை நேபாளத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வரவேற்று நன்றி தெரிவித்தது. இந்நிலையில் ஜீ நியூஸ், இந்தியா டி.வி., ஏபிபி நியூஸ், உள்பட அனைத்து சேனல்கள் மீதான தடை நீக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுவதாக நேபாள டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர் சுதீப் ஆச்சார்யாக தெரிவித்துள்ளார்.