நேர்கொண்ட பார்வை வெற்றி அடைய புதிய வியூகம் அமைக்கும் தயாரிப்பாளர் தரப்பு!
தமிழ் திரையுலகின் வசூல் மன்னர்கள் என்றால் அது ரஜினி, அஜித், விஜய், ஆகும். அவர்களின் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் வசூல் சாதனைகள் படைக்கும். படம் வெளிவரும் நாள் திருவிழா போல காணப்படும்.
அப்படி அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் அதிக வசூல் பெற்று ரூ 100 கோடி கிடப்பில் இணைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் அஜித்தின் நடிப்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது, நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து பரபரப்பான வெற்றியைப் பெற்ற பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. இதில் அஜித் கருப்பு கோட் அணிந்து வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தமிழில் ரீமேக் படமாக உருவாகி உள்ளது.சதுரங்கவேட்டை’, ‘தீரன்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில், ஷ்ரத்தா ஶ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், அஜித்தின் முந்தைய படமான `விஸ்வாசம்’ நல்ல வசூலைக் குவித்ததால், இந்தத் திரைப்படத்தை நல்ல விலைக்கு விநியோகஸ்தர்களிடம் விற்கலாம் எனத் திட்டமிட்டது படக்குழு.
ஆனால், தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்த விலைக்கு விநியோகஸ்தர்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டவே, தயாரிப்பு நிறுவனமே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. தமிழகம் முழுக்க ஒருவருக்கே படத்தை விற்காமல், ஏரியா வாரியாகப் பிரித்து விற்கலாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அப்படி விற்பனை செய்யும் பட்சத்தில் `விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தைவிட, நல்ல விலைக்குப் படம் விற்பனையாகும் எனத் திட்டமிட்டுள்ளனர். அமிதாப் ரோலில் அஜித் நடிக்கும் இப்படத்துக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் ரசிகர்களுடன் சேர்ந்து படக்குழுவும் காத்திருக்கிறது.
விஸ்வாசம் போல் நேர்கொண்ட பார்வையும் 100 கோடி கிடப்பில் இணைய வாழ்த்துவோம்.