இந்த செடியை பார்த்தால் விட்டு விடாதீங்க..!மருத்துவ பயன்கள் அதிகம்..!

Photo of author

By Priya

Nerunji Mull: நம்மை சுற்றி ஆயிரக்கணக்கான செடிகள் உள்ளன. ஆனால் அதன் மருத்துவ பயன்கள் பற்றி எதுவும் நமக்கு தெரியாமல் உள்ளன. சாதாரணமாக சாலை ஓரங்களில் நடந்து சென்றுக்கொண்டு இருக்கும் போது சில செடி, கொடி, மரங்களை நாம் பார்ப்போம். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் எதுவும் நமக்கு தெரியாது.

பிறகு ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டு அதற்கு என்ன மருந்து உட்காெண்டால் குணமடையும் என்று தேடிப்பார்க்கும் போது இந்தவகையான செடிகளை பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். நாம் இந்த பதிவில் நெருஞ்சி முள் செடியின் நன்மைகள் பற்றி காண்போம்.

நெருஞ்சி முள் செடி

இந்த நெருஞ்சி செடி இந்தியா, இலங்கை நாடுகளில் காணப்படுகிறது. பூ, இலை, காய் என அனைத்தும் மருத்துவ பயன்கள் கொண்டது. இதன் மருத்துவ பயன்கள் பற்றி யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். அவ்வளவு மருத்துவ பயன்கள் கொண்டது இந்த நெருஞ்சி முள் செடி.

மேலும் பலர் இந்த செடியில் அதிக அளவு முட்கள் இருப்பதால் அவ்வளவாக இதனை யாரும் வளர்க்க மாட்டார்கள். மேலும் வறண்ட தரையில் படர்ந்து வளரக்கூடிய செடியாக இந்த நெருஞ்சில் செடி உள்ளது.

பயன்கள்

நெருஞ்சி முள் செடியின் இலையை பறித்து நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகத்தில் உள்ள கல் குணமாகும்.

இந்த நெருஞ்சி செடியில் அதிக அளவு இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளது. இதில் ஊட்டச்சத்து அதிக அளவு இருக்கிறது. இது உடலில் உள்ள நரம்புகளுக்கு, எலும்புகளுக்கு வலிமை சேர்க்கிறது.

இந்த செடிகளின் இலைகளை பறித்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் ஆண்மை பெருகும்.

மேலும் இந்த செடியை பறித்து வந்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சீரகம், ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் உஷ்ணத்தால் உண்டாகும் சிறுநீரக கோளாறு, வயிற்று வலி, கல்லடைப்பு போன்றவை குணமடையும்.

நெருஞ்சில் செடியை பறித்து வந்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரில் கறை படிந்த கட்டு துணிகளை ஊறவைத்தால் அதில் உள்ள கறைகள் எல்லாம் போய்விடும்.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை கசாயம் வைத்து அருந்தி வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

மேலும் படிக்க: Poovarasu Maram: உங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மரம் உள்ளதா? கட்டாயம் இதை பாருங்க..!