கொட்டிக்கிடக்கும் வைரம்! ஆயிரக்கணக்கில் படையெடுத்த மக்கள்!

Photo of author

By Kowsalya

தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வைரம் உள்ளதாக ஒரு பகுதிக்குச் சென்று வைரம் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பொதுவாகவே ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகமான வைர ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குதான் பல்வேறு வைர சுரங்கங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அங்குள்ள மக்களின் வாழ்க்கை அந்த வைரஸ் சுரங்கங்களில் வேலை செய்தே போகின்றது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள உப்புகெளா மாவட்டத்திலுள்ள க்வாலத்தி என்ற கிராமத்தில் கடந்த சில நாட்களாக மும்முரமாக மண்ணைத் தோண்டி வருகின்றனர்.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடும்பமாக ஆயிரக்கணக்கில் திரண்டு அவர்கள் மண்ணை தோண்டி வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும் , அங்கு வைரம் கிடைப்பதாக பரவிய தகவல் தான். அந்த கிராம மக்கள் சிலர் மண்ணிலிருந்து வைரம் போன்ற வெள்ளை கற்களை கண்டெடுத்துள்ளனர். அது வைரம் தான் என காட்டுத் தீ போல தகவல் பரவி வருகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்த அந்த கிராமத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். கோடாலி மற்றும் மண்வெட்டி போன்றவற்றை எடுத்து வந்து வைர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட கற்களை வைரம் என்று கூறி விற்பனை செய்து வருகின்றனர். இவற்றால்தான் தங்கள் வருமை ஒழிய போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர், அந்நாட்டு மக்கள். இதனிடையே அங்கு கண்டெடுக்கப்பட்ட கற்கள் குவார்ட்ஸ் கற்களாக இருக்கும் என புவியியல் வல்லுனர்கள் சிலர் கூறியுள்ளனர். கண்டெடுக்கப்பட்டு கற்களை ஆய்வு செய்வதற்கு தென்னாபிரிக்கா அரசு சார்பில் ஆய்வாளர் குழு அனுப்பப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்டுள்ள கற்கள் வைரமா? என்பதை ஆய்வில் தெரியவரும். ஒருவேளை கண்டெடுக்கப்பட்ட வைரமாக இருந்தாலும் அரசுக்கே சொந்தம் என்று சட்டம் கூறியுள்ளது. மக்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.