Netflix: நெட்ஃபிளிக்ஸ் தனது இணைய தள பக்கத்தில் விளையாட்டுப் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்து இருக்கிறது.
இந்தியாவில் ஓடிடி இணைய தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தொலைக்காட்சிகள் மற்றும் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் வெளியிடுவதற்கான வலைதளமாக ஓடிடி இணையதளம் இருக்கிறது. இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஓடிடி இணைய தளங்களாக ஹாட்ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ், ஜியோ, போன்றவைகள் இருக்கிறது.
இந்த தளங்களுக்குள் கடுமையான போட்டி நிவி வருகிறது. ஹாட்ஸ்டார் இணையதளம் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பியதாலேயே அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டு இருக்கிறது. அமேசான் பிரைம் மற்றும் ஜியோ போன்ற ஓடிடி தளங்கள் விளையாட்டுகளை நேரடியாக ஒளிபரப்பிய தால் தான் அதிகப்படியான சந்தாதாரர்களை தன் பக்கம் ஈர்க்க முடித்தது அந்த வகையில் நெட்பிளிக்ஸ் wwe குத்துச்சண்டை போட்டிகளை தன் தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்து இருக்கிறது எனலாம்.
அதற்காக வருகின்ற மார்ச் மாதம் முதல் பத்து ஆண்டுகளுக்கு wwe குத்துச்சண்டை போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்று இருக்கிறது. இதற்கு முன் சோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் வெற்றி பெற முடியாத நிலையில் இந்த முடிவை எடுத்து இருக்கிறது எனலாம். ஏற்கனவே நெட்பிளிக்ஸ் தளத்தில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
பொதுவாக திரைப்படங்கள் திரையில் மட்டுமே ஒளிபரப்ப வேண்டிய நிலை இந்தியாவில் உள்ளது. அனால், ஓடிடி தளங்கள் வருகைக்கு பிறகு திரைப்படங்களை இந்த இணைய தளத்தில் வெளியிடலாம் என்ற சூழல் உள்ளது.