இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு

Photo of author

By CineDesk

இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு

இந்தியாவின் வர்த்தக சந்தை என்பது உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய லாபம் தரும் நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக என்டர்டைன்மென்ட் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன

இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகின்றன

அந்த வகையில் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கு இணையாக தற்போது மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று வருவது நெட்பிளிக்ஸ், அமேசான், சன்நெக்ஸ்ட் போன்ற செயலிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செயலிகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் என்டர்டைன்மென்ட் செயலிகளில் முன்னணி செயலி நிறுவனங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ் சிஇஓ நேற்று அளித்த ஒரு பேட்டியில் இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 1,400 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் திரைப்படங்களின் உரிமையை பெறுவது மற்றும் சொந்தமாக திரைப்படங்கள் மற்றும் தொடர்களை தயாரிப்பது போன்றவற்றில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சினிமா துறைக்கு இணையாக வளர்ச்சி பெற்று வரும் இந்த செயலிகள் தயாரிக்கும் தொடர்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதும் இதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை நிறுவனங்கள் பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது