குடியுரிமை சட்டம் குறித்து பிரபல இயக்குனர்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் பேருந்துக்கு தீ வைக்கும் அளவுக்கு இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து கருத்துக் கூறுபவர்கள் கவனமாக வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் எச்சரித்துள்ளன. ஆனால் இதையும் மீறி ஒரு சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சில கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் ’இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது’ என்று குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் போலீசாரின் மாணவர்கள் மீதான வன்முறைக்கும் அவர் கண்டனம் தெரிவித்தும் பதிவு செய்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர். அமெரிக்கா, அரேபியாவில் இதேபோல் ‘இது எங்கள் அப்பன் வீட்டு சொத்து’ என்று கொண்டாட முடியுமா? சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடியுரிமை கேட்க முடியுமா என்றும், இந்தியா இந்திய நாடு என் அப்பன் வீட்டு சொத்தை அது பாதுகாப்பாக வைப்பது எனது கடமை என்றும் ’கண்டவனும் கருத்து பேசிட்டு திரிய இது தனி மனித ஓழுக்கம் இல்லாத தமிழ் சினிமா இல்லே’ என்றும் தெரிவித்து வருகின்றனர்.