வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு.. கேட்டாலும் கிடைக்காது!! மணிமண்டபம் மட்டும் தான் உங்களுக்கு- ஸ்டாலினின் எஸ்கேப் பிளான்!!

Photo of author

By Rupa

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு.. கேட்டாலும் கிடைக்காது!! மணிமண்டபம் மட்டும் தான் உங்களுக்கு- ஸ்டாலினின் எஸ்கேப் பிளான்!!

Rupa

Netizens have condemned the opening of Mani Mandapam of late Egiers while ignoring the reservation for Vanniyars.

PMK DMK: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து கண்டுகொள்ளாத போது மறைந்த ஈகியர்களின் மணி மண்டபம் திறப்பது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடானது உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வழங்கியும் ஆளும் கட்சியால் தடைப்பட்டே நிற்கிறது. இதுகுறித்து பாமக சார்பாக கடிதங்கள் அனுப்பியும், போராட்டங்கள் அரங்கேறியும் ஆளும் தலைமை சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் கூட பெரியார் நினைவு தினத்தையொட்டி கூட போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பினாலும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினாலும் மடைமாற்றும் விதத்தில் தான் பதில் வருகின்றது. இவ்வாறு இருக்கும் சூழலில் 21 ஈகியர்கள் தங்களின் உரிமையை வலியுறுத்தி 1987 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய பொழுது காவல்துறையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இப்படி உயிரிழந்தும் 30 ஆண்டுகள் கழித்து தற்பொழுது வரை வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது கிடைத்த பாடில்லை.

இதனை சரி கட்டும் விதமாக இவர்களுக்கான மணிமண்டபம் விழுப்புரத்தில் கட்டப்பட்டு அதனை நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களின் உயிர் தியாகத்திற்கு நன்றி கடன் செலுத்த வேண்டுமென்றால் கட்டாயம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தான் வழங்க வேண்டும், அதை விட்டு மணிமண்டபம் கட்டி இதனை இதனை திறந்தால் சரி செய்து கொள்ள முடியுமா?? மேற்கொண்டு இதனையும் ஆளும் திமுகவானது அரசியலாக்கவே நினைக்கிறது என நெட்டிசன்கள்கூறுகின்றனர்.

மேலும் ஸ்டாலின் மணி மண்டபம் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.