“CM க்கு பெண்கள் தான் முக்கியம்” -உதயநிதி!! யார் அந்த சார் கண்டுபிடிக்க துப்பில்லை.. டார் டாராக கிழிக்கும் நெட்டிசன்ஸ்!!

Photo of author

By Rupa

DMK: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வழக்கானது தமிழகத்தையே புரட்டி போட்டது. இதில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனைத்து நிர்வாகிகளுடனும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து தான் எதிர்க்கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல இவரை காப்பாற்ற வேண்டும் என்று நோக்கத்தில் ஆளும் கட்சி உதவி செய்து வருகிறதா என்று கேள்வியும் முன் வைத்துள்ளனர். ஏனென்றால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தின் பின்னணியில் பெரிய தலை ஒன்று இருப்பதாக கூறுகின்றனர்.

இது குறித்த வாக்குமூலத்தில் கூட அந்த மாணவி, என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு நான் சொல்லும் போதெல்லாம் நான் கூறும் நபருடன் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மிரட்டி உள்ளார். அதேபோல செல்போனில் சார் என்றும் ஒரு பெரிய பின்புலத்திடம் பேசியுள்ளார். ஆனால் யார் அந்த சார் என்பது பாதிக்கப்பட்ட மாணவிக்கு தெரியவில்லை. இது குறித்த அறிவிப்புக்கள் வெளியானதும் எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் யார் அந்த சார் எனக் கேட்க  ஆரம்பித்துவிட்டனர்.

முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் கூட அதிமுக இதுகுறித்து கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தியது. முதல்வர் இது குறித்து பதில் அளிக்கையில், இந்த வழக்கு குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வருகிறது என தெரிவித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்மணியின் வழக்கானது நிலுவையில் இருக்கும் பொழுது அது குறித்த தகவல்கள் வெளிவரக்கூடாது. அப்படி இருக்கையில் மாணவியின் எஃப் ஐ ஆர் குறித்த தரவுகள் யாரால் வெளியாகி இருக்கும்?? இதனால் மாணவியின் எதிர்காலம் பெருமளவில் பாதிப்பை சந்திக்காத என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கட்டாயம் ஆளும் கட்சியின் உதவி இல்லாமல் இப்படி காவல்துறையினால் மட்டும் இச்செயலை செய்ய முடியாது என்று அரசியல் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. அதேபோல இந்த வழக்கானது திமுகவுடன் ஒன்றி தான் உள்ளது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் பேசியது நெட்டிசன்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில், அவர் கூறியதாவது, பெண்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் முதல்வர் மிகவும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அப்படி இருக்கையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் நீதி வாங்கி தந்திருக்க வேண்டும், ஆனால் அதை செய்யவில்லை. மேலும் எப்ஐ ஆர் வெளிவந்ததையாவது கண்டுபிடித்திருக்கலாம் அதுவும் கிடையாது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசிய வார்த்தைக்கு தகுதியற்றவர் என்றும் விமர்சித்துள்ளனர்.