பிரியங்கா ரெட்டி வன்கொடுமை: நெட்டிசன்களின் கேவலமான செயல்

Photo of author

By CineDesk

பிரியங்கா ரெட்டி வன்கொடுமை: நெட்டிசன்களின் கேவலமான செயல்

சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி நான்கு பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது

இதுகுறித்து பெண் எம்பிகள் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசினர். பாலியல் பலாத்காரம் செய்பவர்களை ஆண்மை தன்மையை நீக்க வேண்டும் என்றும், பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்றும் கடுமையாக பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இந்த படுகொலைக்கு எதிராக பயங்கரமாக பொங்கி எழுந்தனர். #RIPPriyankareddy என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர்.

ஆனால் ஒரு பக்கம் பிரியங்கா ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து வந்த நெட்டிசன்கள், இன்னொரு பக்கம் பிரியங்கா ரெட்டியின் பாலியல் பலாத்கார வீடியோவை கூகுளில் தேடி உள்ள கேவலமான செய்தியும் வெளிவந்துள்ளது

இந்த கொடூரம் நடந்த நாளில் இருந்தே பிரியங்கா ரெட்டி புகைப்படத்தையும், பாலியல் பலாத்காரம் குறித்த செய்தியையும், அதுகுறித்த வீடியோவையும் கூகுளில் பலர் தேடி உள்ளது தெரியவந்துள்ளது. இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

மேலும் பிரியங்கா ரெட்டியில் பலாத்கார வீடியோ எந்த இணையதளத்தில் இருக்கின்றது என பலர் சமூக வலைதளங்களிலும் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டு இன்னொரு பக்கம் இருக்கும் அந்த பெண்ணின் பாலியல் பலாத்கார வீடியோவை தேடியுள்ளது நெட்டிசன்களின் மோசமான மனநிலையை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.