உலகத் தரம் வாய்ந்த படத்திற்கு இணையவாசிகள் காட்டும் வன்மம்!!

Photo of author

By Gayathri

இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து அவருடைய துணை இயக்குனர் வர்ஷா பரத் ‘பேட் கேர்ள்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி பெண்கள் குறித்த பலதரப்பட்ட கருத்துக்களை வெளிக்கொண்டு வந்திருந்தது. மேலும், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வர்ஷா பேசியிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் அதில் கூறியதாவது, காலம் காலமாக பெண்கள் என்றால் அடிமை, பூ, பத்தினி, மிகவும் சாந்தமாக இருப்பவள் என்று பெரும்பாலும் அனைவராலும் முடுக்கப்படும் ஒரு பெரும் சமூகமே பெண்.

மேலும், இந்த வரைமுறைகள் யாவும் ஆண்களுக்கு கிடையாது. இந்த படத்தின் கரு முற்றிலும் மாறுபட்டது. இதனை யாராலும் யூகிக்க இயலாது. பெண் என்பவள் ஒரு சாதாரணமானவள். அவளுக்கும் தவறு ஏற்படலாம். அந்த தவறை திருத்திக் கொள்ளும் பொருட்டு அவள் படும் பாட்டினை பற்றிய கதை. இந்த முழுக்க முழுக்க ஒரு சாதாரண பெண்ணின் கதை தான் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த படம் இன்னும் வெளியாகாத சூழ்நிலையில், சர்வதேச ரோட்டர்டோம் நிகழ்ச்சியில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியுள்ளது. இங்கு திரையிடப்படும் படங்கள் உலகம் தரம் வாய்ந்ததாக மட்டுமே அமையும். இப்படத்தை வெளிவராத நிலையில் அவர்கள் குறிப்பிட்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு பட விமர்சனத்தை பலரும் செய்து வருகின்றனர். இயக்குனர் மோகன் அவர்கள் இப்படத்தை வெகு விமர்சியாக திட்டி உள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரியும் படத்தின் கதையை ஏசி விமர்சித்துள்ளார். படம் இன்னும் வெளியாகாத சூழ்நிலையில் இவர்கள் இவ்வாறு விமர்சிப்பது முறையா? என ஒரு தரப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் டீசரை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வைத்துள்ளார். அதற்கு கொஞ்சமும் நாகரிகம் இல்லாத இணையவாசிகள் அவரை தகாத வார்த்தைகளில் ஏசி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் வலைப் பக்கத்தில் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார். எனினும் இணையவாசிகள் அவரது மகளுடன் அவர் இருக்கும் போட்டோவை வைத்து பேட்கேர்ள் வெர்ஷன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். படம் வெளியாகாத நிலையிலேயே அப்படத்தை பற்றி முடிவு எடுத்து இவ்வாறு விமர்சித்து வருகின்றனர்.