கோவிலில் கிடைக்கும் இந்த பிரசாதங்களை ஒருபொழுதும் வீணாக்காதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

0
168

கோவிலில் கிடைக்கும் இந்த பிரசாதங்களை ஒருபொழுதும் வீணாக்காதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

நாம் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் பொழுது கோவிலில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் பிரசாதமாக எண்ணி வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைப்பது வழக்கம்.

அவ்வாறு பிரசாதமாகக் கொண்டு வந்து வைக்கப்படும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. எந்த பொருளை கோவிலில் இருந்து கொண்டு வந்து வீட்டில் வைத்து முறையாக வழிபாடு செய்தால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

அந்த பொருட்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழங்களை வீட்டிற்கு கொண்டு வந்து வழிபாடு செய்வது வழக்கம் அந்த எலுமிச்சம் பழத்திற்கு அதீத சக்தி உண்டு என்றும் நம்பப்படுகிறது. எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் அதனை வீணாக்காமல் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

மேலும் கோவிலில் கொடுக்கும் தீர்த்தங்களை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடு முழுவதும் தெளிப்பதன் மூலம் வீட்டில் உள்ள கண்திருஷ்டி, துஷ்ட சக்திகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் கோவிலில் கொடுக்கும் துளசி தீர்த்தத்தை சிறிதளவு வாங்கி வந்து பூஜையில் வைத்து தினமும் வீடு முழுவதும் தெளித்து வந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

கோவிலில் இருக்கும் தலவிருட்சம் என்பது மூலவருக்கு இணையான சக்தி பெற்றது. தலவிருட்சம் சுத்தி இருக்கும் மண்ணில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியமும் கிட்டும். அதனை ஒரு வெள்ளை நிற துணியில் கட்டி வைத்து உங்களுக்கு தீராத பிரச்சனை ஏற்படும் போது அதனை கையில் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வந்தால் அந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

Previous articleமத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பங்கள்!
Next articleஅரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி!