முன்னணி நடிகைகளை பின் தள்ளிய புது நடிகை!! தென்னிந்திய அளவில் சாதனை!!

0
166
New actress who pushed back the leading actresses !! South Indian level record !!
New actress who pushed back the leading actresses !! South Indian level record !!

முன்னணி நடிகைகளை பின் தள்ளிய புது நடிகை!! தென்னிந்திய அளவில் சாதனை!!

ராஷ்மிகா மந்தனா இவர் இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தார்.

இவர் கடந்த ஐந்து வருடங்களில் 10 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் குறுகிய காலத்திலேயே நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவர்கொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயரத்தில் வைத்திருக்கிறார். கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழி திரைப்படங்களிலும் நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார், மேலும் இவர் அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார், தற்போது பாலிவுட்டிலும் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் அங்கு அமிதாப் பச்சன். சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இப்படி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகைக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா இன்ஸ்டகிரம் பக்கத்தில் அவ்வபோது ஆக்டிவாக இருப்பார். அவரை பல ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 19 மில்லியனுக்கும் மேலாக பின்தொடர்பவர்களின் எணிக்கை வைத்திருக்கும்  தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இதன் மூலம் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் காஜல் அகர்வால். சமந்தா. ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின் தள்ளியுள்ளார்.

author avatar
CineDesk