OPS Stalin: தமிழகத்தில் அரசியல் களமே மாறி வரும் சூழ்நிலை இன்று முதல் ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்திருப்பது அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து பன்னீர்செல்வத்தை கண்டு கொள்வதில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு பாஜக, பன்னீர் செல்வத்தை தனது அனுசரிப்பில் வைத்ததுடன் அதிமுகவையே உனது கையில் கொண்டு வந்து கொடுக்கிறோம் என்றெல்லாம் பேசியுள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழி சென்றதால் பாஜக-வால் தற்போது வாய் திறக்க முடியவில்லை. மத்திய மந்திரி பிரதமர் என பலர் சென்னை வந்தபோதும் அவர்களை பார்க்க பன்னீர் செல்வம் நேரம் கேட்ட போது தர மறுத்து விட்டனர். அதுமட்டுமின்றி மீண்டும் அதிமுகவில் இணைந்து விடலாம் என்ற எண்ணமும் சுக்கு நூறாகிவிட்டது. அதே சமயம் டிடிவி தினகரன் கூட கூட்டணியில் இணைப்பது குறித்து மறுத்து பேசவில்லை.
ஆனால் ஓபிஎஸ் -ஐ கட்சியில் சேர்க்க மாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி விடாப்படியாக கூறிவிட்டார். இப்படி இருக்கும் சூழலில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏன் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ரீதியாக இன்று ஆலோசனை செய்ய இருக்கும் பட்சத்தில் தான் தற்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினுக்கும் உடல்நிலை சரியின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது இது ரீதியாக மரியாதை நிமித்த சந்திப்பை தான் மேற்கொண்டு உள்ளதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளிவருவது ரீதியாக இன்று ஆலோசனை நடக்கும் பட்சத்தில் ஏன் குறிப்பாக இன்று ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்ற கேள்வியை முன் வைத்து வருகின்றனர். அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளிவந்துவிட்டு திமுகவில் பன்னீர்செல்வம் இணைய போவதாக கூறுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அதிமுகவின் மூத்த தலைவரான அன்வர் ராஜா இணைந்தார். தற்போது ஓ பன்னீர்செல்வம் திமுக பக்கம் செல்வது அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.