டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு !! குடிமகன்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி !!

Photo of author

By Parthipan K

இன்று(நவ.1) முதல் தமிழகத்தில் இயங்கிவரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் செயல்படும் என்று தமிழ்நாடு வணிப கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மத்திய , மாநில அரசின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது , கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு டோக்கன் முறைப்படி மது வழங்க வந்தது. வழக்கமாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் , வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டிருந்த பார் வசதி இன்னும் திறக்க அனுமதி இல்லை. மேலும் தமிழகத்தில் மட்டும் 5,200 டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் பாருடன் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.