ஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

0
181

ஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சி மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட அரசு தொழிற் பயிற்சி கூடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல்,தலைமைச் செயலாலர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை கண்காணிக்கும் வகையில் மொபைல் செயலி ஒன்றையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த செயலி மூலம் மாணவர்கள் திறனை கண்காணிப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடய வேலைவாய்ப்பையும் கண்காணிக்க இந்த செயலி அறிமுகம் செய்யப் செய்யப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.

பொறியியல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவால் இன்றைக்கு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிதரித்து வரும் நிலையில் மேலும் மாணவர்களை தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு ஊக்குவிக்கும் செயலாக இது பார்க்கப்படுகிறது.

மேலும் டெல்லி மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற திறன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.

Previous article“எட்டுத்திக்கும் பற’ திரையரங்கே காலியா கெடக்கு; இதுல தமிழ் ராக்கர்ஸ் வேற! படத்தின் இயக்குனர் புலம்பல்!
Next articleபாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!