மானாட மயிலாட என்ற டான்ஸ் ஷோ, கிட்டத்தட்ட பத்து சீன்ஸ்ளாக வெற்றிகரமான நிகழ்ச்சியை நடத்தி வந்தவர் டான்ஸ் மாஸ்டர் கலா. இவருடைய பேமஸ் டயலாக் என்னவென்றால் ”கிழி கிழி..” என்று அரங்கமே அதிரும் அளவிற்கு திறமைசாலிகளை வாழ்த்துவார்.
திறமைசாலிகளை உருவாக்கும் எண்ணத்தில் தற்போது புதிதாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்க உள்ளார். எனவே பிரபல யூட்யூப் நிறுவனமான டிரண்ட்லௌடு நிறுவனமே கலாபிளிக்ஸ் யூ டியூப் சேனலையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.
இது ஓர் குறும்பட போட்டி. கலையுலகில் கால் பதிக்கும் கனவுடன் இருப்பவர்களுக்கான களம். இந்த சேனலின் கான்செப்ட் என்னவென்றால் குறும்படம் ஒன்றை தயாரிப்பது. இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் தங்களது குறும்படங்களை அனுப்பலாம் அதனை தேர்வு செய்யும் பொறுப்பு கலா மாஸ்டர் வைத்துள்ளார்.
இந்த போட்டிக்கான பரிசு என்னவென்றால் ஏதேனும் ஒரு OOT தளத்தில் வெப் சீரியல் அல்லது படத்தில் வாய்ப்பு வழங்கப்படும்.
இளைஞர்களிடம் கொட்டிக்கிடக்கும் திறமைகளை வெளிக் கொணரும் விதமாகவே இப்படி ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்ததாக கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் கலாபிளிக்ஸ் மூலமாக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு திரை பிரபலங்களும் பங்குபெற்று சுவையான நிகழ்ச்சிகளை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திரைப்பட இயக்குனராக திரையுலகில் கால்பதிக்க நினைக்கும் இளைஞர்கள் இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி இந்த போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.