தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்றைய தினம் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர ஆரம்பித்து இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே கரையை கடக்க கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.
இதனால் எதிர்வரும் தினங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் எனவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அதோடு கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், சென்னை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே தென்மேற்கு பருவமழை ஆரம்பத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே கனமழை மற்றும் அதிக மழை என பெய்து தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாக திகழ்ந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக உண்டான சேவைகளை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்து அங்கிருந்து தமிழகம் முழுவதும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு பணிகளை தொடங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளின் விலை நிலவரம் விண்ணை முட்டும் அளவிற்கு எகிறிகொண்டு இருக்கிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை செய்தால் இந்த காய்கறிகளின் விலை நிலவரம் இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவையெல்லாம் தமிழக அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பதை தற்போது பொது மக்களின் கேள்வியாக இருக்கிறது.