ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

Photo of author

By Amutha

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

நியாய விலைக்கடைகளில் புதிய திட்டமாக பொருட்கள் பாக்கெட் முறையில் வழங்கப்பட உள்ளது. 234 தொகுதிகளில் சேலத்தில் ஒரு ரேசன் கடையில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின் எடை தொடர்பான முறைகேடுகள்  தவிர்க்கபடுகிறது. நுகர்வோரின் நீண்டநாள் புகார்கள் பாக்கெட் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில், பொது விநியோகத்தில் மக்கள் அளவு சரியான மற்றும் சுத்தமான பண்டங்களை பாக்கெட் வடிவில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டம் மாவட்டத்திற்கு 5 கடைகள் என்ற அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம்.

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பண்டங்கள் குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கபடுவதன் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.  இதில் அரிசி, கோதுமை, சர்க்கரை,   பாமாயில்  போன்ற இன்றியமையாத பொருட்கள் விநியோகம் செய்யபடுகிறது.

கடந்த சில காலமாக கள்ளச்சந்தைகளில் ரேசன் பொருட்களைத் திருடி அதிக லாபத்திற்கு விற்பது கண்டறியப்பட்டது. கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் பராமரிப்பு சட்டம், 1980 இன் கீழ், முறைகேடு செய்பவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

மறைமுகமாக நடைபெற்று வந்த ரேசன் விநியோக பண்டங்கள் கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தற்போது ஒரு முடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் ஊழியர்களின் அரிசி தொடர்பான கடத்தல்களுக்கும் வாய்ப்புகள் இருக்காது.

மேலும் ஜிபிஎஸ் உடன் கூடிய இ வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் லாக் வசதியுடன் கூடிய ஜிபிஎஸ் கண்காணிப்புடன் இ வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இதன் அடிப்படையில் வாகனங்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல முடியும் மேலும் இது கண்காணிக்கப்பட்டு வருவதால் குற்றங்கள் உடனுக்குடனே கண்டறியப்படும் வகையில் இது அமைந்துள்ளது. 01.07.2024 முதல் 31.07.2024 வரையிலான நாட்களில் கடத்த முயன்ற  ரூ.49,40,516 மதிப்புடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டது.