TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Pavithra

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

Pavithra

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மூலம்,அரசுத் துறைகளில் பல்வேறு ஊழியர்களை நியமனம் செய்து பணியமர்த்தப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வானது ஆப்லைன்(எழுத்து) தேர்வாக தான் இதுவரை நடத்தப்பட்டு,கலந்தாய்வின் மூலம் பணியில்
அமர்த்தப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் காலங்களில் நடக்கவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக ஆன்லைன் தேர்வு நடத்தும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

 

அண்மையில் டிஎன்பிஎஸ்சி நடத்திய 3 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை பகுப்பாய்வாளர், மற்றும் மருத்துவ ஆய்வாளர், பொதுப்பணித்துறை உதவி இயக்குனர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மற்றும் நவம்பரில் தேர்வுகள் நடத்தப்பட்டு இந்த தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளதுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.