ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது.

இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.

இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் மலிவான பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு இந்த ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள அனைவரது பெயரும் இணைக்கப்பட்ட இந்த ரேஷன் அட்டையை மலிவான பொருட்கள் பெறுவதற்கு மட்டுமின்றி பல முக்கிய ஆவணங்களை பெற வேண்டும் என்றாலும் இந்த ரேஷன் கார்டு மிகவும் அவசியம்.

அவ்வாறு மிகவும் பயனுள்ள இந்த ரேஷன் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால் அதனை சுலபாமாக பெற்று கொள்ளலாம்.அந்த வகையில் அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ரேஷன் கார்டு தொலைந்து விட்டால்  https://www.tnpds.gov.in என்ற அரசு அதிகாரபூர்வமாக அளித்துள்ள இணையதள பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.

அந்த பக்கத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பின்பு அதில் உள்ள payment என்ற ஆப்சனை கிளிக் செய்து ரூ.45 தொகையை செலுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.விண்ணபித்த 15 நாட்களில் உங்களது ரேஷன் அட்டை உங்களது வீடு தேடி வரும்.