தேர்தல் முடிவில் புதிய மாற்றங்கள்! தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்பரல் மாதம் 6 –ம் தேதி நடந்து முடிந்தது.அதனைத்தொடர்ந்து இத்தேர்தல்களின் முடிவுகள் மே 2 –ம் தேதி வெளிவரும் என கூறினர்.அதுமட்டுமின்றி தமிழகத்துடன் கேரளா,புதுச்சேரி,அசாம் ஆகிய மாநிலங்கலிலும் ஏப்ரல் மாதம் 6 –ம் தேதியே சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.இதன் அறிவிப்புகள் வரும் நிலையில் புதிதாக ஓர் உத்தரவை தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,5 மாநிலங்களில் நடந்து முடிந்த வாக்கு பதிவும் ஒரே நேரத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் சொல்லப்படும் என கூறினார்.அந்த முடிவுகளின் எண்ணிக்கை காலை 8.30 க்கு ஆரம்பமாகும் என கூறியது கிடையாது,மே 2-ம் தேதி இந்த 5 மாநிலங்களின் வாக்கு பதிவும் 8 மணிக்கே ஆரபித்துவிடும் என புதிய உத்தரவை கூறியுள்ளார்.அன்று காலையில் 8.00 மணிக்கு தபால் வாக்குகளும் அதனையடுத்து 8.30 மணிக்கும் இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.
சிறிய அறைகளாக இருந்தால் ஓர் அறைக்கு ஏழு மேஜைகள் என இரு அறைகளில் வாக்கு எண்ணுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.வாக்கு எண்ணிக்கையை 14 மேஜைகளில் இருந்து குறைப்பது பற்றி அதற்கு முடிவு எடுக்கவில்லை.அதுமட்டுமின்றி மேஜைகளின் எண்ணிக்கை குறையக்கூடாது என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர்.வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளிவரும் என கூறினார்.
72 மணி நேரத்திற்கு முன்னரே கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதால் அதற்கான அறிவிப்பு விரைவாக வெளியிடப்படும் என கூறினார்.எவ்வாறு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை கடைபிடிக்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறோம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.