இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாகி!!! முதல் பெண் நிர்வாகியாக ஜெயவர்மா சின்ஹா தேர்வு!!!
இந்திய ரயில்வேயின் மிக உயரிய பதவியான தலைமை நிர்வாகி பதவிக்கு புதிய நிர்வாகியாக முதல் முறையாக இந்திய அரசாங்கம் பெண் ஒருவரை நிர்வாகியாக தேர்வு செய்து உள்ளது.
இந்திய நாடு முழுவதும் இருக்கின்ற பல்வேறு ரயில்வே கட்டமைப்புகளையும் இந்திய ரயில்வே நிர்வகித்து வருகின்றது. இது இந்திய அரசின் ரயித்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது.
சுமார் 68000 கிலோ மீட்டர் பாதையை கொண்ட இந்திய ரயில்வே உலகின் 4வது பெரிய ரயில்வே கட்டமைப்பை நிர்வாகம் செய்யும் சிறப்பு பெற்று விளங்குகின்றது. இந்திய ரயில்வே மூலமாக நாட்டுக்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி வருமானமாக கிடைத்து வருகின்றது.
இந்த இந்திய ரயில்வேயின் தலைவராகவும், இந்திய ரயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் யார் செயல்படுகிராறோ அவர்தான் இந்த ஒட்டு மொத்த ரயில்வே துறைக்கும் பொறுப்பானவர் ஆவார். இதனால் இந்த பதவி மிகவும் சிறப்புக்குறியதும் பெருமைக்குரியதும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும்.
தற்பொழுது இந்திய ரயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரியாக அணில் குமார் லஹோட்டி அவர்கள் செயல்பட்டு வருகிறார். இந்திய ரயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரி பணியில் இருந்து அணில் குமார் லஹோட்டி அவர்கள் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
இதையடுத்து இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்திய ரயில்வேயின் உச்சகட்ட மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைமை நிர்வாக அதிகாரி பணிக்கு இந்திய அரசு பெண் ஒருவரை தேர்வு செய்துள்ளது.
இந்திய ரயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெய வர்ம சின்ஹா என்ற பெணை இந்திய அரசு இந்திய ரயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்துள்ளது. இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட பெண்மணி விஜய வர்ம சின்ஹா அவர்கள் கூடிய விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார். மேலும் இத்தகைய பொறுப்பு மிக்க சிறப்பு வாய்ந்த உயர்ந்த பதவியான தலைமை நிர்வாக அதிகாரி பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ஜெய வர்ம சின்ஹா அவர்கள் பெற்றுள்ளார்.