இந்த இடங்களில் புதிய கல்லூரி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Rupa

இந்த இடங்களில் புதிய கல்லூரி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

2022 மற்றும் இருபத்திமூன்றாம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையின் தேவைக்கேற்ப பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும்  ஒவ்வொரு துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்தது. நடந்து முடிந்த  சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என்பவர் தனது தொகுதியில் பாலிடெக்னி கல்லூரி இல்லாததால் புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 570 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது.

இதில் பெரும்பான்மையாக மாணவர்களின் சேர்க்கை குறைவாகவே காணப்படுகிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க,தற்பொழுது புதிய ஐந்து பாடத்திட்டங்களை நிறுவ உள்ளதாக கூறினார். மேலும் இது குறித்து மாணவர்களுக்கு தக்க பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல பாலிடெக்னிக் படித்தவர்களால் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர முடியாது என்ற ஒன்று இருந்தது. தற்பொழுது அது மாற்றம் செய்யப்பட்டு பாலிடெக்னிக் படிக்கும் அனைவரும் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிகளில் சேரமுடியும் என கூறி உள்ளார். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டவற்றை க்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். முதலில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் பாலிடெக்னிக் வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அமைச்சர் பொன்முடி கூறியது, பாலிடெக்னிக் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் நிறுவுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க முடியும். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த கூட்டுத்தொடர் பட்ஜெட்டிலும் சரி இந்த பட்ஜெட்டிலும் சரி பல புதிய சலுகைகள் அளித்துள்ளார்.

அதில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கியதும் ஒன்று. திமுக ஆட்சி வந்த பிறகு 31 அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது என பொன்முடி கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசு கல்லூரிகளில் வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கல்லூரிகளில் பாடப்பிரிவு புதிதாக கொண்டுவரப்பட உள்ளது என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் மேலும் 10 கல்லூரிகளில் பிஎச்டி படிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றார். ஊட்டி தொகுதியில் பாலிடெக்னிக் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அங்கு கல்லூரி நிறுவ அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.