கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா! மீட்டெடுக்குமா மத்திய அரசு!

Photo of author

By Sakthi

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மொத்தமாக 2263 பேர் கொரொனாவால் பலியாகி இருக்கிறார்கள். இதுவரையில் இந்த பாதிப்பு காரணமாக, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த நோய்த் தொற்றில் இருந்து இதுவரையில் ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 459 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில் மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தாலும் கூட விரைவில் தட்டுப்பாடு நீக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்திருக்கிறது. இதுவரையில் 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் வரும் ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கும் அதிகமான ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்படுகிறது. கோவிஷில்ட் தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில், ஒரு சில மாநிலங்களில் இலவசமாக இந்த தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், பீகார், உத்திரப்பிரதேசம், போன்ற மாநிலங்களில் தடுப்பூசி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.