கொரோனா வைரஸ் ரஷ்யா கூறிய அதிர்ச்சி தகவல்: உலக நாடுகள் கவலை

0
126

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரானோ என்ற வைரஸ் தற்போது அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பரவி விட்டது. குறிப்பாக ஜப்பான் தென் கொரியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் உலக நாடுகள் கொரானோ வைரஸ் தங்கள் நாடுகளில் தாக்குவதை தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரானோ வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்றும் அது வரை இந்த வைரஸ் பரவாமல் பாதுகாக்க வேண்டியது அந்தந்த நாடுகளின் அரசுகளின் கடமை என்றும் ரஷ்ய நாட்டின் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வைரைஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்க ஆறு மாதங்கள் ஆகும் என ரஷ்யா கூறியிருப்பதால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. மேலும் இந்த வைரசை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்க அதிகமான நிதி தேவைப்படுவதாக கூறப்படுவதால் ஆறு மாதங்களுக்கு மேலாகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்போதுதான் இந்த வைரஸ் மக்களிடையே பரவ ஆரம்பித்து இருப்பதால் அது எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் மருத்துவர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. எனவே இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடித்து ஆக வேண்டிய கட்டாய நிலையில் உலக நாடுகளின் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇதோ 1971 துக்ளக் பத்திரிகை: பெரியார் ஆதரவாளர்களின் பதில் என்ன?
Next articleகுடியுரிமை வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு