வந்தது புதிய டிஜிட்டல் பேங்கிங் விதிகள்!! இதை தெரியாமல் தப்பி தவறியும் பணம் அனுப்பாதீர்கள்!!

Photo of author

By Rupa

“ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI)” சமீபத்தில் டிஜிட்டல் பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. “நவம்பர் 1, 2024″முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதிகள், பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதனால், அனைத்து பேங்க் கஸ்டமர்களும் இந்த மாற்றங்களைப் பற்றி புரிந்து கொண்டு தங்களுக்கு ஏற்புடைய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இந்த பரிவர்த்தனை தவிர்க்க முடியாததாக மாற்றியுள்ளது, அதனுடன் உள்ள பல புதுமையான பாதுகாப்பு முறைகளும் தற்கால டிஜிட்டல் பரிமாற்றங்களில், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இந்த புதிய விதிகளுடன், பாரம்பரிய ஓடிபி (OTP) முறை மட்டுமின்றி, கூடுதல் உறுதிப்பாட்டு முறைகளையும் இணைத்துள்ளது.

1. விரிவான KYC உறுதிப்பாடு: இப்போது, பணம் அனுப்புவோர் மற்றும் பெறுபவரின் விவரங்கள் கூடுதலாக உறுதிப்படுத்தப்படும்.
KYC ஆவணங்கள் மூலம் இது செய்யப்படும்; அதில் ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
எந்தவொரு பரிவர்த்தனையும் தொடரும் முன்னர், இந்த தகவல்களை சரிபார்க்க வேண்டும்.

2. மொபைல் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம்: பணம் அனுப்புவோர் மொபைல் நம்பர் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் விவரங்கள் (கைரேகை அல்லது முக ஸ்கேன்) மூலம் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
இதனால், எந்த பரிவர்த்தனையும் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் சரிபார்க்கப்பட்ட சாதனங்கள் மூலம் மட்டுமே செய்ய முடியும்.

3. பரிவர்த்தனை விதிகளில் மாற்றங்கள்: ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎப்டி (NEFT) போன்ற வழிகளில் கூடுதல் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பரிமாற்றம் செய்வதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ KYC உறுதிப்பாட்டை பூர்த்தி செய்ய வேண்டும்.
புதிய அங்கீகார நடவடிக்கைகள் இந்த முறைகளில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் பொருளாதார குற்றங்களை தடுப்பதற்காகவும், கஸ்டமர்களின் பரிவர்த்தனை அனுபவத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், சில விடயங்களில் கவனம் குறைவாக இருந்தால், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

படி 1: KYC ஆவணங்களை புதுப்பித்து வைத்துக் கொள்ளுங்கள்: உங்கள் ஆதார், பான், மற்றும் பிற ஆவணங்களில் மாற்றங்கள் இருந்தால், உடனே புதுப்பித்து வையுங்கள்.

படி 2: சரியான தகவல்களை பகிருங்கள்: மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.

படி 3: கடவுச்சொற்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்: கடவுச்சொற்கள் மற்றும் இதர விவரங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம்.இந்த புதிய விதிகள் கஸ்டமர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை வழங்கும்.

பாதுகாப்பான பரிவர்த்தனைகள்: உங்கள் பணம் பிழையான கணக்கில் செல்லாமல் தடுக்கப்படும்.

எளிய பின்தொடர்தல்: எந்தவொரு பரிவர்த்தனையும் யாரால் செய்யப்பட்டது, அதை எளிதில் கண்டறிய முடியும்.
முழுமையான கண்காணிக்கப்பட்டு பரிவர்த்தனை செயல்முறைகள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இந்த விதிகள் ரிசர்வ் பேங்கால் அனைத்து பேங்குகளுக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.