தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

Photo of author

By Anand

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க புதிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், 12 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் இந்த குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த குழு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதற்கான உறுப்பினர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில்

சவிதா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனம் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினர்களான பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், யுனிசெப் நிறுவனம் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் ராமகிருஷ்ணன்,உலக செஸ்  சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் உள்ளிட்டோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவானது ஓராண்டு காலத்துக்குள் தன் பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.