#BREAKING: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தில் வெளியான புதிய ஆதாரம்
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல முறை இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய பல்வேறு அமைப்பினரும் மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடினர்.சில தினங்களில் நிலைமை கட்டுக்குக்குள் அடங்காமல் போராட்டம் கலவரமாக மாறியது.இந்த கலவரத்தில் பள்ளி முழுவதும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இதனையடுத்து நிலமையை சுதாரித்து கொண்ட தமிழக அரசும்,காவல்துறையும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இறந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவரையும் காவல்துறை சிசிடிவி கேமரா உதவியுடன் கைது செய்து வந்தது.ஆனால் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் இந்த மாணவியின் மரணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.
மாணவி உயிரிழந்த ஜூலை 13 ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் மாணவியின் தாயார் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியானது
அப்போது இறந்த மாணவி ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் அந்த பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் வெளியாகியுள்ளது.
ஸ்ரீமதி ஜூலை 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.