நாட்டின் அன்றாட வாழ்வில் பணவர்தனை எளிமையாக்கும் வகையில் இந்திய அரசு UPI கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த UPI பரிவர்த்தனை முறை 2016 ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த முறை நாட்டின் பண பரிவர்த்தனை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தற்போது இந்த பண பரிவர்த்தனை முறையானது பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரை அனைத்து விதமான கடைகளிலும் இந்த UPI பண பரிவர்த்தனை முறை மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த UPI முறையை வெளி நாடுகளிலும் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதுவரையில் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் UPI மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா-மாலத்தீவு இடையே கடந்த ஆகஸ்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை தொடர்ந்து அந்நாட்டில் UPI அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாலத்தீவு அரசு வெளியிட்ட அறிக்கையில், மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் UPI முக்கிய பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய நிதி கட்டமைப்பு விரைவான பண பரிவர்த்தனை, வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு இதன் மூலம் சாத்தியமாகும் என நம்புகிறோம்.