கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதி

Photo of author

By Anand

கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதி

Anand

New facility to monitor inmates' activities live through video camera

கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதி

சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வரும் வார்டன்கள் மற்றும் சிறை துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதற்காக அவர்களின் உடையில் பொருத்திக் கொள்ளக் கூடிய வகையில் பாடி கேமரா வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறையில் கைதிகளிடையே நடைபெறும் பிரச்சனைகள் மற்றும் அதிகாரிகள் தங்களை தாக்கி விட்டனர் என்று சிறை கைதிகள் பொய் கூறுவது உள்ளிட்ட பிரச்சனைகளின் உண்மை தன்மையை இந்த கேமரா மூலம் அறிந்து கொள்ளும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விரைவில் சேலம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த பாடி கேமரா வழங்கப்பட உள்ளதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.