புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமல்! இந்த பொருட்களுக்கு அனைத்தும் வரி விகிதம் உயர்ந்துள்ளது!
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28, 29 ஆகிய இரு தினங்களில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் பாக்கெட் பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க முடிவு செய்தார்கள். அதன் படி புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூன் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்கூட்டியே லேபிடப்பட்ட ஆட்டா, பன்னீர், தயிர், அரிசி உள்ளிட்ட சில்லறை பொருட்கள் மீது ஐந்து சதவீதம் காசோலைகள் 18 சதவீதம் மருத்துவமனையில் அரை வாடகை நோயாளி ஒருவருக்கு நாளொன்று ஐயாயிரம் மேல் வசூலிக்கப்படும் தொகைக்கு 5% அட்லஸ் உள்ளிட்ட வரைபடங்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
மேலும் இது தவிர தங்கும் விடுதிகளின் வாடகை நாளொன்றுக்கு ரூ 1000 ஆக இருத்தல் எல்இடி விலக்குகள் சாதனங்கள் கத்திரிக்கோல் உள்ளிட்ட கைகள் சார்ந்த பொருட்கள் பென்சில் ஷார்ப்னர் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள் பிளேடுகள் ,பெண்கள், புரோக்கர்ஸ் போன்ற சில்வர் பொருட்கள் மற்றும் கேக் ஆகியவற்றின் மீது தற்போது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சாலைகள் ரயில்வே, மெட்ரிக், பாலங்கள் ,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைகள் மற்றும் மயான துணை ஒப்பந்தங்கள் போன்ற சில சேவைகளுக்கு தற்போது 12 சதவீதத்தில் இருந்து 18% உயர்த்தப்பட்டுள்ளது. தனியாரிடம் செய்யப்படும் ராணுவ கொள்முதல்,ராணுவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த வரி மாற்றம் இன்று அமலுக்கு வந்தது.