டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

0
41
New Indian Team T20 Matches!! BCCI Action Announcement!!
New Indian Team T20 Matches!! BCCI Action Announcement!!

டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

தற்போது இந்திய கிரிக்கெட் அணி டொமினிகாவில் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது. மேலும் 2டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடவுள்ளது.

ஏற்கனவே  2டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டி20 இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து துணை கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ரோஹித் சர்மா கேப்டன் ,  துணை கேப்டனா அஜிங்க்யா ரஹானே, இஷான் கிஷன் மற்றும் கே.எஸ். பரத் விக்கெட் கீப்பராகவும், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட் , விராட் கோலி,  ஜெய்ஸ்வால் , ரவிச்சந்திரன் அஷ்வின் , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், சைனி, ஜெயதேவ் உனட்கட்  போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் டி20 போட்டிக்கு  இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, துணை கேப்டன் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர்கள், சுப்மான் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா , அக்சர் படேல், குல்தீப் யாதவ் , ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங் , உம்ரான் மாலிக் , ஆவேஸ் கான் , முகமது குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

ஆனால்  டி20 போட்டிகளில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் அந்த அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும்  வாய்ப்பு கிடைக்கப்படவில்லை.

author avatar
Jeevitha