ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!

0
30

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!

 

நடப்பாண்டு அதாவதூ 2023ம் ஆண்டுக்கான ஆசிய தடகள போட்டிகளுக்கான சிறந்த தடகள வீரராக மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமாறன். இவர் மதுரையில் விவாசயம் செய்து வருகிறார். விவசாயி திருமாறன் அவர்களுடைய மகன் தான் ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட செல்வ திருமாறன் ஆவார். செல்வ திருமாறன் அவர்கள் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார்.

 

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட செல்வ திருமாறன் அவர்கள் கியூபா நாட்டை சேர்ந்த யோண்ட்ரிஸ் என்ற பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்று சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

 

சமீபத்தில் கிரீஸ் நாட்டில் வெனிசெலியா நகரில் சர்வதேச கிராண்ட் பிக்ஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் மும்முறை நீளம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில் 16.78 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்தார். 16.78 மீட்டர் நீளம் தாண்டிய செல்வ திருமாறன் அவர்கள் அப்போட்டியில் தங்கம் வென்றார்.

 

16 ஆண்டுகளுக்கு முன்னர் 2007ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ப்பீர்ந்தர் சிங் மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் 16.63 மீட்டர் தாண்டினார். அதுவே இன்றுவரை சாதனையாக இருந்த நிலையில் மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் அவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளார்.

 

ஏசியன் அத்தலடிக் அசோசியேசன் சார்பில் நடத்தப்பட்ட 20 வயதுக்கு உட்பட்டோர்களின் தடகளப் போட்டியில் மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் அவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். செல்வ திருமாறன் செய்த சாதனைக்காக இவரை ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்வு  செய்யப்பட்டுள்ளார். ஜூலை 10ம் தேதி பேங்காக்கில் நடைபெறும் விழாவில் செல்வ திருமாறன் அவர்களுக்கு ஆசியாவின் சிறந்த தடகள வீரர் என்ற விருது வழங்கப்படவுள்ளது.