சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?

0
130

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

ராஜ்புத்-ன் முன்னாள் மேலாளர் திஷா அவர் தற்கொலை செய்துகொண்ட சில மாதங்களுக்கு முன்பு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.மேலாளர் இறந்த சில மாதங்களிலே இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின.இதனால் வழக்குப்பதிவு செய்து இவரின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

சுசாந்தின் நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்ரபோர்தி, சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் சுசாந்தின் தந்தை இவரது தோழியான நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதும்,எனது மகள் தற்கொலைக்கு காரணம் ரியா தான் என்றும்,அவரை சொத்துக்காக மன ரீதியா குடும்பமே தொந்தரவு செய்தார்கள் என்றும்
பாட்னா காவல்துறையில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து ரியா மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாட்னா காவல்துறை கையில் எடுத்துள்ள இந்த வழக்கை மும்பைக்கு போலீசாருக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை ரியா மனு செய்துள்ளார். சுசாந்த் சிங் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்புப் பதிலைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பைக் காவல் ஆணையர் பரம் பிர் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜுன் 13, 14 அன்று எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளன. இந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சுசாந்த் சிங் வீட்டில் பார்ட்டி எதுவும் நடக்கவில்லை. எல்லாக் கோணங்களில் இருந்தும் இந்த வழக்கை மும்பைக் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. விரைவில் தற்கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous articleபுது சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்! அண்ணா பல்கலைக்கழகம்
Next articleதிமுக எம்.எல்‌.ஏ.விற்கு கொரோனா தொற்று!