புது சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்! அண்ணா பல்கலைக்கழகம்

0
74

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினர்களை சமீபத்தில் தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் பனிமலர் கல்விக் குழுமத்தின் தாளாளரும், செயலாளருமாக செயல்பட்டு வரும் ப.சின்னதுரை அவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினராக தமிழக அரசு நியமித்துள்ளது. இதையொட்டி அவருக்கு பனிமலர் கல்வி குழுமத்தின் முதல்வர்கள், மேலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

author avatar
Parthipan K