கோத்தபய பதுங்கிவுள்ள இடம் குறித்து வெளியான புதிய தகவல்!! இலங்கையில் பரபரப்பு !.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் சில தினங்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டை அடித்து தும்சம் செய்தார்கள். கற்களை எடுத்து அவரின் மாளிகையில் வீசினர். அவர் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த சொகுசு கார் கண்ணாடிகள் தூள் தூளாக நொறுங்கியது.
போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய முன்கூட்டியே தனது குடும்பத்துடன் வீட்டிலிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இந்நிலையில் கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.இதைதொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று அவரது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் பரவி வருகிறது.அவர் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு தப்பிச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.