Cinema Talk: 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை கரம் பிடித்து இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 2018 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் தனியார் ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்தார். ஆனால் இவரது திருமணத்திற்கு முன் ஒரு நடிகருடன் மிகுந்த நெருக்கமாகவும் காதல் வயப்பட்டும் இருந்தார்.
சினிமா இண்டஸ்ட்ரி முழுவதும் இவர்கள் இருவரும் கட்டாயம் திருமண செய்து கொள்வார்கள் என்று எண்ணினர். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை, இவரின் ரகசிய காதலனாகவே மிதுன் சக்கரவர்த்தி இருந்துள்ளார். மிதுன் சக்கரவர்த்திக்கு முன்னதாகவே திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும் இவர் மீது ஸ்ரீதேவி காதல் வசம் பட்டுள்ளார். இவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அச்சமயத்தில் செய்திகள் பரவியது. இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துவிடுமாம் இந்த சண்டையானது இரவு முழுவதும் கூட நீளுமாம்.
அப்படி சண்டை இருந்தாலும் மிதுன் சக்கரவர்த்தி ஒரு பொழுதும் தன் வேலையை விட்டுக் கொடுத்ததில்லையாம், சரியான நேரத்திற்கு வந்து தனக்கு உண்டான ரோலை முடித்துக் கொடுத்து தான் செல்வாராம். இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. இதற்கு மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி கூட காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர். அவர்களின் காதல் கதை குறித்து பாலிவுட் பேட்டி ஒன்றில் தற்பொழுது கரண்ட் ரஸ்தான் கூறியுள்ளார்.