கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற கார் விடுப்பு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கின்ற நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர வைக்கும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.
கோவை டவுன்ஹால் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றி எரிந்தது. அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளதால் கார் தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காரில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது யார் என்பது தொடர்பாக தெரியாமல் இருந்து வந்தது இதனை தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த விபத்து குறித்து சென்னை தடைய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை செய்தனர் காரில் எறிந்த இடத்திலிருந்து ஏராளமான ஆணிகள், கோலிகுண்டுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டனர்.
காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் கார் வெடிப்பு சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என்று தெரிய வந்தது. அதோடு கடந்த 2019 ஆம் வருடத்தில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் உக்கடம் பகுதியைச் சார்ந்த முகமது தர்கா, முகமது அசாருதீன், ஜி எம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், இஸ்மாயில், முஹம்மது நவாஸ், அன்சாரி இஸ்மாயில் உள்ளிட்ட ஐந்து நபர்களை கைது செய்துள்ளதோடு யாருக்கும் கிடைக்காத விதத்தில் அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருட்கள் அவர்கள் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கு குறித்து தமிழகம் தாண்டி பல்வேறு நிலைகளில் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த வழக்கை தேசிய புலனாய் முகாமை விசாரிக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடம் மற்றும் ஜமேஷா முபினின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் சோதனை செய்த அவர்கள் பல்வேறு தடயங்களை சேகரித்து இருக்கின்றன. குறிப்பாக பல்வேறு வெடி பொருட்கள் அவர்கள் தயார் செய்து வைத்திருந்ததும், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
அதோடு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள் இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக கார் விபத்தில் உயிரிழந்த அந்த நபர் தன்னுடைய உடல் முழுவதும் ஷேவ் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சில அடிப்படை தீவிரவாத அமைப்புகளில் தற்கொலை படை தாக்குதலுக்கு முன்னர் தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் உடலில் இருக்கின்ற முடிகளை அகற்றிவிட்டு தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். இந்த காட்சியை கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப்பட்டிருக்கும்.
தற்போது அதே நடைமுறையை இந்த நபரும் பின்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஜிஹாத் மற்றும் ஹதீஸ் தொடர்பாக சில குறிப்புகளும், சிலேட்டில் ஐஎஸ் அமைப்புக்கான வாசகங்கள் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்.