சென்னையில் வசிக்கும் பொதுமக்களிடம் சைக்கிள் உபயோகத்தினை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஷேரிங் திட்டம், கடந்த ஜூன் மாதம் முதல் சென்னை மாநகராட்சியில் மீண்டும் துவங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது வாடகை சைக்கிள்களை தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் புதிய வசதியை ஒன்றை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுமக்கள் வாடகை அடிப்படைகளில் சைக்கிள்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான வாடகையாக 7 நாட்களுக்கு ரூபாய்.299 ,15 நாட்களுக்கு ரூ.599 மற்றும் 30 நாட்களுக்கு ரூபாய். 999 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் வசிக்கும் மக்கள் இத்திட்டத்தில் சேர விரும்புவார்கள் 044 – 26644440 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் .மேலும் முன்பு செய்த நபர்கள், தங்களது வீட்டிற்கே அதிகாரிகள் வந்து சைக்கிளை வழங்குவார்கள்.
அவர்களிடம் சைக்கிள் வாடகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து பயனாளர்கள் தேர்வு செய்த காலம் வரையிலும் தங்களுக்கு சைக்கிள்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் அதிகாரிகள் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தவுடன் அதிகாரிகளே வீட்டிற்கு வந்து சைக்கிள்களை பெற்றுக் கொள்வார்கள்.
இந்த திட்டத்திற்காக சென்னையில் அண்ணா நகர்மேற்கு ,திருமங்கலம், ஷன்னைநகர் ,முகப்பேர், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற 33 இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைத்து , ஒவ்வொரு நிலையத்திற்கும் 160 சைக்கிள்களை பொதுமக்கள் பயன்பட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.