ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்!

ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களை அவ்வப்போது அவதூறாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது. அந்த வகையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் எல்லாம் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கூறினர்.

அதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதிமுக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் அமைச்சர் பொன்முடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு அடுத்தபடியாக திமுக பேச்சாளர் சாதிக் என்பவர் நடிகை குஷ்பூ ,காயத்ரி உள்ளிட்ட நடிகைகளை அவதூறாக பேசினார். இவ்வாறு இவர்கள் பேசியதற்கு கனிமொழி முதற்கொண்டு மன்னிப்பு கோரினர்.

திராவிட மாடல் ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணி. அரசு பேருந்தில் பயணம் செய்பவருக்கு அறிமுகம். பல்லிளிக்கும் திராவிட மாடல்‌.

தற்பொழுது பருவமழை அதிக அளவு பெய்து வரும் சமயத்தில் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.இந்நிலையில் அரசு பேருந்து ஒன்றில் பயணிகள் பேருந்தின் உள்ளேயே குடைகள் பிடித்தபடி நின்று கொண்டிருக்கும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பேருந்தின் மேற்பக்கத்தில் பல ஓட்டைகள் இருப்பதால் அதன் வழியே மழை நீர் பேருந்துக்குள் நுழைகிறது.

அந்த பேருந்திலும் பல பயணிகள் குடைப் பிடித்தபடி பயணித்து வருகின்றனர்.இதனை அதிமுக-வை சேர்ந்த  கோவை சத்தியம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஓசி பஸ்ஸில் வரிசையில் அடுத்ததாக ஓசி தண்ணீர், அரசு பேருந்தின் புதிய அறிமுகம் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment