புதிய கண்டுபிடிப்பு! இனி வாய் வழி கொரோனா தடுப்பூசி அமல்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதலாம் ஆண்டு கொரோனா தொற்று அலையின் போது மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும் முன்னே அரசாங்கம் விரைந்து செயல்பட்டது.அவ்வாறு செயல்பட்டதால் மக்கள் பெருமளவு உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து சில கட்டுப்பாடுகளை மக்கள் பின் பற்றுமாறு அறிவுறுத்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் ஆரம்ப கட்டக் காலத்தில் பின்பற்றிய விதிமுறைகளை நாளடைவில் ஏதும் பின்பற்றாமல் இருந்ததால் கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கிக் கொண்டனர்.அதனால் ஆயிரக்கணக்கில் உயிர் சேதம் நடைபெற்றது.
கொரோனா நோய் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடந்த வண்ணமாகதான் இருந்தது.ஆனால் எந்த வித மருந்தும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு வெளிவரவில்லை.பல சோதனைகள் மேற்கொண்ட பிறகே கொவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் அமலுக்கு வந்தது.முதலில் இந்த தடுப்பூசியை போட மக்கள் யாரும் முன்வரவில்லை.கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரை இழக்க நேரிடும் என்ற எண்ணம் மக்கள் மனதில் பெரும் வாரியாக இருந்தது.
இதனை அறிந்த அரசாங்கம்,மக்களிடையே பல விழிப்புணர்வுகளை மேற்கொண்டனர்.அந்தவகையில் புதிதாக வந்து மிகவும் பிரபலமடைந்த பாடலான “என்ஜாய் ஏஞ்சாமி” என்ற பாடலை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் படி பாடலை மாற்றியமைத்து போலீசார் அனைவரும் நடனமாடிய வீடியோ மிகவும் பிரபலமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து தற்போது அதிகப்படியாக மக்கள் தடுப்பூசி போட முன் வந்துவிட்டனர்.ஆனால் தடுப்பூசி தான் கைவசம் இல்லாமல் போய்விட்டது.தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறையால் பல தடுப்பூசி முகாம்களை செயல்படாமலே உள்ளது.
மத்திய சுகாதர அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராயிச்சி நிறுவனத்தின் ஐ.சி.எம்.ஆர்-என்.சி.இ.டி இயக்குனர் சாந்தா தத்தா கூறியது,தற்போது கொரோனா தடுப்பு தாயரித்தலின் ஆராய்ச்சி திட்டமானது ஜெர்மனில் உள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.தற்போது கொரோனாவிற்கான மருந்தானது ஊசி வழியாக கொடுக்கப்பட்டு வருகிறது.அதற்கு அடுத்தாக போலியோ சொட்டு மருந்து போல கொரோனா சொட்டு மருந்து திட்டத்தையும் கொண்டுவர அரசிடம் சமர்பித்துள்ளோம்.அது அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நிதி வழங்கப்பட்ட உடன் அதற்கான பணிகள் தொடங்கும்.கொரோனா சொட்டு மருந்து தயாரிக்க குறைந்த பட்சம் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.முன்பைப்போல முதலில் விலங்குகள் மேல் சோதனை செய்து பக்க விளைவுகள் ஏதும் வராமல் இருப்பின் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் எனக் கூறினார்.